பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து.. உரிமையாளர் உட்பட பலர் உடல் சிதறி பலி

Report Print Arbin Arbin in இந்தியா
203Shares

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பெண்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரது மனைவி காந்திமதிக்கு சொந்தமான வானவெடி மற்றும் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காலை 11 மணியளவில் திடீரென வெடி, வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் காந்திமதி (57), ராசாத்தி (50), லதா (42), மலர்கொடி (65), சித்ரா (45) உள்ளிட்ட 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.

மரணந்தவர்களின் உடல்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரத்னாம்பாள் (60), தேன்மொழி (35) அனிதா, ருக்குமணி (38) ஆகிய 4 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் இரு பெண்கள் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மரண எண்ணிக்கை 7 என அதிகரிகரித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்