மனைவியை வீடியோ எடுத்து மிரட்டினேன்! பல பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்: கணவனின் பகீர் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வங்கி கேஷியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(35). இவருக்கும் தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தாட்சர்(32) என்ற பெண்ணிற்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

எட்வின் ஜெயக்குமார் விராலி மலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் திருமணத்திற்குப் பிறகு அவர் மனைவியுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தாட்சர், அவரது பீரோவை சோதனை நடத்தியதில் 10 செல்போன்கள், லேப்டாப் சிக்கின. அதில் பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100 ஆபாச வீடியோ இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, கணவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், என்ஜினீயரிங் படிப்பு முடித்த நான், வங்கித் தேர்வு எழுதி கடந்த 2014-ஆம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கி ஒன்றில் கிளர்க்காக பணியில் சேர்ந்தேன்.

அதன் பின் 2016-ஆம் ஆண்டு பணிமாறுதல் ஆகி புதுக்கோட்டைக்கு வந்தேன். எனக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி தாட்சரிடம் கூறினேன்.

மேலும், திருமணத்திற்கு முன்னர் எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுடன் உல்லாசமாக இருந்ததை எனது செல்போனில் பதிவு செய்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்தேன்.

இதனால், மனைவி மீது எனக்கு ஈர்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவருடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தேன்.

எனக்கு வரும் ஆபாச குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை எனது மனைவி பார்த்து விட்டார். நான் வங்கியில் வேலை பார்க்கும் சக ஊழியர்களையும், வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து எனது செல்போனில் வைத்திருந்தேன்.

அதுமட்டுமின்றி, வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பாஸ்புக் மற்றும் பணபரிவர்த்தனைகளையும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்திருந்தேன்.

திருமணத்திற்கு முன்பாக பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எனது செல்போன்களில் இருந்ததை எனது மனைவி பார்த்து விட்டு இதுபற்றி என்னிடம் கேட்டு பிரச்சினை செய்தார்.

இதனால் கைகலப்பு ஏற்பட்டு நான் எனது மனைவியை அடித்தேன். இதுபற்றி எனது அம்மாவிடம் எனது மனைவி கூறியபோது என் அம்மாவும் தாட்சரையே திட்டினார்.

அதன்பிறகு என் மனைவி குளிக்கும் போது நான் அவருக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து என்னிடம் பிரச்சனை செய்தால் நான் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டினேன். இதையடுத்து என் மனைவி அவர் ஊருக்கு சென்று புகார் அளித்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

எட்வின் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்தும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை, இதனால் அவர்கள் யாரேனும் புகார் கொடுத்தால் பொலிசார் எட்வினை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்