சசிகலா விடுதலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க டிடிவி தினகரன் திடீரென அதிகாலையில் டெல்லிக்கு கிளம்பி சென்றார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலிருந்தபடியே கட்சிப் பணிகளை கவனித்து வந்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டிடிவி தினகரன்.
இந்தநிலையில், இன்று அதிகாலை சிறப்பு விமானத்தின் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி சென்றுள்ள அவர் வி.கே.சசிகலா விடுதலை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் ஆலோசனையில் ஈடுபட சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்மூலம் சசிகலா சிறையிலிருந்து முன்கூட்டியே வெளியே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது உறுதியாகியுள்ளது.