இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் தாயாரையும் பாட்டியையும் தந்தை கொலை செய்வதைப் பார்த்து பிஞ்சு பிள்ளைகளை கதறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிஞ்சு பிள்ளைகள் கண் முன்னேயே மனைவியையும் மாமியாரையும் அந்த இளைஞர் கொலை செய்து உடலை வெட்டி நொறுக்கியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தி தலாய் மாவட்டத்திலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து சென்ற அப்பகுதி மக்கள், இரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்கள் இருவரையும், அவர்களுக்கு அருகே அச்சத்தில் உறைந்துபோய் கதறியபடி இருக்கும் பிள்ளைகளையும் பார்த்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மனைவி மற்றும் மாமியாரை கொன்ற பின்னர் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை, அறை ஒன்றில் மயக்கமான நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
தலாய் மாவட்டத்தின் ஹபானியா கிராமத்தை சேர்ந்த குறித்த இளைஞரின் உடலில் விஷம் கலந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் தொடர்பில் தகவல் இல்லை எனவும், ஆனால் தற்போது மயக்க நிலையில் இருக்கும் இளைஞர் கண் விழித்த பின்னர் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் மனைவியும் பிள்ளைகளும் கடந்த 4 மாதங்களாக அவரது தாயாருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
தமதி இருவரும் விவாகரத்து பெறும் முடிவில் இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குடும்ப பிரச்சனைகளே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.