தாய்ப்பாலுக்கு நிகரான சத்து இதில் இருக்குங்க!

Report Print Meenakshi in குழந்தைகள்

அனைத்து உணவு பொருள்களை காட்டிலும் அதிக சத்துக்களை உடையது தாய்ப்பால். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது.

சில நேரங்களில் சூழ்நிலையின் காரணமாக தாயினால் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க முடியாவிட்டால் பெரும்பாலானோர் பவுடரில் கலந்த பால் அல்லது பசும்பாலினையே அளிப்பர்.

ஆனால், அமெரிக்காவை சேர்ந்த உணவு நிபுணர் மேற்கொண்ட ஆய்வில் தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தேங்காய் பாலில் சத்துகள் கொண்டுள்ளதாகவும் அதனை குழந்தைக்கு அளிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் மேற்கொண்ட ஆய்வில், தாய்ப்பாலில் உள்ள லாக்டோஸானது தேங்காய் பாலில் இல்லை என்பதால் எளிதாக செரித்து விடும் தன்மையுடையது.

இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தேங்காய் பால் மட்டுமல்லாது தேங்காய் எண்ணெய், இளநீர் போன்றவையும் உடலுக்கு நன்மை தருபவையே.

பயன்கள்

தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலமானது எளிதாக உறிஞ்சப்படுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலினை தருகிறது.

தேங்காய் பால் உட்கொள்வதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி மாரடைப்பு போன்றவை வருவதை தடுக்கிறது.

மேலும், உடலில் உள்ள கொழுப்பினை குறைத்து, தசைகளை வலிமைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியமானது உடைந்த செல்களை சரி செய்கிறது.

இளநீரில் காணப்படும் மினரல்கள் இரத்த அளவினை சரியான அளவில் வைப்பதற்கும் வயிற்று போக்கு போன்றவற்றினை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

தேங்காய் பால் உடலின் செரிமான மண்டலம் சீர்செய்து உடல் நலத்தினை மேம்படுத்துகிறது

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments