4வது திருமணம் செய்யும் 49 வயது பாப் பாடகி!

Report Print Kabilan in வாழ்க்கை முறை

பிரபல பாப் பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், பேஸ்பால் வீரர் ஒருவரை 4வது திருமணம் செய்யவுள்ளார்.

ஹாலிவுட்டில் அனகோண்டா, பிளட் அண்ட் வைன், மெய்ட் இன் மான்ஹாட்டன், பார்க்கர் போன்ற படங்களில் நடித்தவர் பாப் பாடகி ஜெனிபர் லோபஸ். 49வது வயதாகும் இவர் பல்வேறு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட இவர், 1997ஆம் ஆண்டு ஓஜானி நோவா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஓர் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ஜெனிபர், 2001ஆம் ஆண்டு நடிகரும், நடன இயக்குநருமான கிறிஸ் ஜூட் என்பவரை திருமணம் செய்தார்.

பின்னர் 2003ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு பாடகரும், நடிகருமான மார்க் அந்தோணியை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இந்த திருமணமும் 10 ஆண்டுகளில் கசந்தது.

அதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டில் மார்க் அந்தோணியை விவாகரத்து செய்த ஜெனிபர், தற்போது பேஸ்பால் வீரர் அலெக்ஸை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017ஆம் ஆண்டு முதல் அலெக்ஸை காதலித்து வரும் ஜெனிபர் லோபஸ், தங்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அலெக்ஸ் அளித்த மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெனிபர் லோபஸுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், அலெக்ஸும் ஏற்கனவே விவாகரத்தாகி 2 குழந்தைகளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்