ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலையில் முடி கொட்ட முக்கிய காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

Report Print Nalini in மருத்துவம்
1456Shares

இன்று ஆண் பெண் என இரு பாலரிலும் இளம் வயதினருக்கு இருக்கும் பிரச்னையே தலைமுடி பிரச்சனைதான். முடி உதிர்வு, பொடுகு தொல்லை, இள நரை பிரச்சனை என ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பிரச்சனை.

வீட்டில் எங்கு பார்த்தாலும் முடிகள் கிடக்கின்றன. தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன.

தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை ஒவ்வொரு பதின் வயது பெண்களுக்கும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது.

இப்போதெல்லாம் முடி கொட்டாதவர்களை பார்ப்பது மிக அரிது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடிகொட்டுவது பொதுவான பிரச்னையாக இருந்தாலும், காரணம் வேறுபடும்.

முடியின் அழகை பெரும்பாலும் நாம் ரசிப்பது உண்டு. பெண்கள் எப்படி தனது முடியை அடிக்கடி கோதி கொள்கிறார்களோ அதே போன்று ஆண்களும் தங்களது முடியை செய்வதும், பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது.

முடியின் வளர்ச்சி மிக முக்கியமானதாக எப்போதும் கருதப்படுகிறது. முடியின் வளர்ச்சியும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கும்.

முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முயோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருதல்? முடிவிஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று பார்ப்போம்

ஆண்களுக்கு

  • ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர் முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
  • சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம்.
  • மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம்.
  • நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடிகொட்ட ஆரம்பிக்கும்.
  • சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும்,தலையில் கண்டபடி டை அடிப்பதாலும் கூட முடிகள் உதிரலாம்.

பெண்களுக்கு

  • பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு.
  • 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம்.
  • சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னைஉருவாகும் போதும் முடி உதிரலாம்.
  • இன்னும் சில பெண்களுக்கு‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடிஉதிரலாம்.
  • கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம்.

முடியை பராமரிக்க செய்ய வேண்டியவை

சாதம் வடித்த தண்ணீர்

நாம் வீண் என நினைத்து கிழே ஊற்றும் சாதம் வடித்த தண்ணீர் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. இந்த சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சீகைக்காய் பவுடரைக் கலந்து தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் முடி அடர்த்தியாக வளரும். முடிக்கு பளபளப்பும் கிடைக்கும்.

முடி வளர

முடி உதிர்ந்த இடத்தில் எலு மிச்சம்பழ விதை, மிளகுசேர்த் து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

சாறு

பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவி வர முடி வளரும்.

கீழாநெல்லி

கீழாநெல்லி வேரை சுத்தம் செய் து சிறிய துண்டாக நறுக்கி தேங் காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழு க்கை மறையும், முடியும் வளரும்.

செம்பருத்தி

செம்பருத்திப்பூவின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வர முடி நன்றாக வளரும். ஆலிவ் ஆயிலை முதல் நாள் இரவு சூடாக்கி தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால், முடி பளபளப்பாகவும், நன்றாகவும் வளரும்.

வெந்தயம்

வெந்தயத்தை தண்ணீர்விட்டு அரைத்து , அந்த விழுதை தலையில் தேய்த்து, அரைமணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்வதால் முடி கொட்டாது. நன்றாக வளரும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை தினசரி முடியின் வேர்கால்களில் இட்டு நன்றாக மசாஜ் செய்து வர முடி நன்றாக வளரும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்