ஈரானுடனான பதட்டம்.. வளைகுடாவிற்கு விரையும் பிரித்தானியா போர் கப்பல்: ராயல் கடற்படை அதிரடி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

மேற்கத்திய நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் பிரித்தானியா ராயல் கடற்படை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தடைகளை மீறி சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்வதாக சந்தேகத்தின் பேரில் கிரேஸ் 1 டேங்கைர கைப்பற்றி ஈரானை கோபப்படுத்தியது பிரித்தானியா.

பிரித்தானியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் வைத்து stena impero டேங்ரை கைப்பற்றியது ஈரான். மேலும், வளைகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையல், சமீபத்தில் பிரித்தானியா கைப்பற்றி ஈரானின் கிரேஸ் 1 டேங்கர் விடுவிக்கப்பட்டது.

எனினும், வளைகுடா கடல் வழி செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் பிரித்தானியாவின் HMS Montrose போர் கப்பல் ஈடுபட்டது. அதற்கு கூடுதல் பலமாக கடந்த மாதம் HMS Kent பேர் கப்பலை பிரித்தானியா அனுப்பியது.

இந்நிலையில், அரேபிய வளைகுடாவில் பாதுகாக்கும் பணியில் ஈடுபட மூன்றாவது பிரித்தானியா போர்க்கப்பல் செல்கிறது என ராயல் கடற்படை சனிக்கிழமை அறிவித்தது.

இப்போது, பிரித்தானியாவின் HMS Defender போர் கப்பல் அதன் பணியில் இருந்து பசிபிக் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் அபாயமாக கருதப்படும் சிவப்பு சின்னம் பறக்கும் பகுதிகளில் கடல் வழி சுதந்திரத்திற்கு சோதனை ஏற்படும் போதெல்லாம், கடல்வழி சுதந்திரத்தை பாதுகாக்க பிரித்தானியா நிற்கிறது என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers