அமெரிக்க எடுத்த அதிரடி முடிவு... ஈராக்கிற்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் குறித்து அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு சிரியாவிலிருந்து விலகும் கிட்டத்தட்ட 1,000 படைகள் அனைத்தும் மேற்கு ஈராக்கிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடரவும், ஈராக்கைப் பாதுகாக்க உதவும் பணயில் அமெரிக்கா படைகள் ஈடுபடும் என்று கூறினார்.

வடகிழக்கு சிரியாவிலிருந்து படைகளை திரும்பப் பெறும் பணிகள் விரைவாக தொடர்கிறது, சில வாரங்கள் அனைத்து படைகளும் திரும்பப் பெறப்படும் என்று மத்திய கிழக்குக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் எஸ்பர் கூறினார்.

தற்போதைய அமெரிக்காவின் திட்டம் படைகள் மேற்கு ஈராக்கில் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதாகும், இந்த படையில் சுமார் ஆயிரம் எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று எஸ்பர் குறிப்பிட்டார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்