ஒட்டுமொத்த ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஹுவாவி நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்துவருகின்றமை தெரிந்ததே.

இக் கைப்பேசிகளில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இப்படியிருக்கையில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியான முறுகல் உச்சத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக ஒவ்வொரு நாட்டு உற்பத்கள் மீதும் தமது வெறுப்பை உமிழ்ந்து தள்ளுகின்றன.

அதாவது முன்னர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை அதிகரித்தார், இதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்க உற்பத்திகளுக்கான வரியை அதிகரித்தது.

இந்நிலையில் சீனாவின் ஹுவாவி நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதனை அடுத்து கூகுள் நிறுவனமும் ஹுவாவி கைப்பேசிகளுக்கான அன்ரோயிட் அப்டேட்களை நிறுத்தியுள்ளது.

இதனால் உலகெங்கிலும் உள்ள ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்