RealMe அறிமுகம் செய்யும் அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீன நிறுவனமான RealMe ஆனது கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இந்நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி வடிமைப்பில் ஈடுபட்டுவருகின்றது.

இதன்படி தற்போது RealMe Q எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த கைப்பேசியானது 6.3 அங்குல அளவு, 2340 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 712 processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB of RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

கூகுளின் அன்ரோயிட் 9.0 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியில் 4,000 mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தவிர 48 மெகாபிக்சல்கள். 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை கொண்ட 3 பிரதான கமெராக்களும், 16 மெகாபிக்சல்களை உடைய ஒரு செல்ஃபி கமெராவும் தரப்பட்டுள்ளன.

இதேவேளை 6GB RAM உடைய கைப்பேசியின் விலை 140 டொலர்களாகவும், 8GB RAM உடைய கைப்பேசியின் விலை 168 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers