Vivo அறிமுகம் செய்யும் உயர் வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீன நிறுவனமான Vivo வடிவமைக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தற்போது சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

இந்நிலையில் அதிக வினைத்திறன் கொண்ட மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை Vivo அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது Vivo S7 என அழைக்கப்படுகின்றது.

இக் கைப்பேசியானது வளைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 765G mobile processor பிரதான நினைவகமாக 8GB RAM என்பவற்றினைக் கொண்டிருப்பதுடன், 128GB மற்றும் 256GB சேமிப்பு நினைவகங்களை உடைய இருவேறு பதிப்புக்களாக கிடைக்கவுள்ளன.

மேலும் 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய இரு செல்ஃபி கமெராக்களையும், 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

இவற்றில் 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட கைப்பேசியானது 425 டொலர்களாகவும், 256GB உடைய கைப்பேசி 470 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்