உலகின் டாப் 5 பெரிய கார் நிறுவனங்களின் சூப்பரான சிறப்புகள்

Report Print Raju Raju in வாகனம்

கார்கள் என்றாலே பலருக்கும் அலாதி பிரியம் இருக்க தான் செய்யும். அப்படிப்பட்ட கார் தயாரிக்கும் நிறுவனங்களில் உலகளவில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் பெரிய நிறுவனங்களையும் அதன் சிறப்புகளையும் காண்போம்.

Toyota Motors

டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் (Toyota Motor Corporation) தான் தற்போது உலகளவில் கார் தயாரிப்பில் முதல் இடம் வகிக்கிறது. ஜப்பான் நாட்டில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. கடந்த 1937 ஆம் ஆண்டு கிய்ச்சிரோ டயோடா என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் உலகளவில் தற்போது 3,46,219 பேர் வேலை செய்கிறார்கள். 2015 ஆம் வருடத்தில் மட்டும் இந்நிறுவனம் 10.15 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.

Volkswagen Group

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 1937ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. 2016ன் கணக்கு படி இந்த நிறுவனத்தில் தற்போது 6,10,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதன் ஆண்டு வருமானம் 10.14 மில்லியன் ஆகும்.

General Motors

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மிக பழமையானதாகும். அமெரிக்காவில் வில்லியம் மற்றும் சார்லஸ் ஸ்டீவார்ட் இணைந்து கடந்த 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி இந்நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். தற்போது இதில் 2,16,000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதன் வருமானம் 9.92 மில்லியன் ஆகும்.

Nissan-Renault alliance

ரெனால்ட் நிசான் கார் நிறுவனம் 1899 ஆம் ஆண்டு தான் தொடங்கபட்டது. பெரிய கார் நிறுவனங்களில் நான்காம் இடத்தில் இது உள்ளது. பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் தற்போது 2,00,000 பேர் வேலை செய்கிறார்கள். இந்நிறுவனம் 8.5 வருவாய் ஆண்டுக்கு ஈட்டுகிறது.

Hyundai Motor Group

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 1967ம் வருடம் டிசம்பர் 29ஆம் திகதி தென் கொரியாவில் சுங் ஜூ யங் என்பவரால் நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 8.01 மில்லியன் வருவாய் ஈட்டும் இந்த நிறுவனத்தில் 2,10,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments