தற்போது எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழ்வது எலன் மொஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் ஆகும்.
இதுவரை சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது குறித்த நிறுவனம்.
அத்துடன் எலன் மொஸ்க் தலைமையில் ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளி ஓடங்களை விண்ணிற்கு அனுப்பும் நிறுவனமும் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தனது டெஸ்லா நிறுவனத்தினை ஆப்பிள் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்.
கடந்த காலங்களில் தானியங்கி முறையில் செயற்படக்கூடிய எலக்ட்ரிக் கார்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிப்பதில் முனைப்புக் காட்டி வந்தது.
எனினும் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக ஆப்பிள் அறிவித்திருந்தது.
அதாவது எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் இந்த எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஆப்பிள் காலடி பதிக்கவுள்ளது.
இப்படியான நிலையிலேயே எலன் மொஸ்க் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்துடன் இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.