பேஸ்புக்கில் ’காலை வணக்கம்’ என பதிவு செய்த இளைஞர் கைது: காரணம் இதுதான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பேஸ்புக்கில் காலை வணக்கம் என பதிவிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.

பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெய்தர் லிட் குடியிருப்பு பகுதியில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுந்து வருகிறார்.

இவர் கடந்த 15ம் திகதி தனது முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கையில்காபி மற்றும் சிகரெட்டுடன் புல்டோசரின் அருகில் நின்று கொண்டு, உள்ளூரில் பேசப்படும் அரபு மொழியில் ‘உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்’ என்று பதிவிட்டிருந்தார்.

பொதுவாக பாலஸ்தீன இளைஞர்களின் பதிவுகளை இஸ்ரேல் பொலிசார் கண்காணித்து வருவது வழக்கம்.

இதனடிப்படையில் தானியங்கி மொழிபெயர்ப்பு வசதி மூலமாக இளைஞரின் பதிவை ஆய்வு செய்ததில் ‘அவர்களை தாக்கு’ என்னும் மொழியாக்கம் கிடைத்துள்ளது, இதனை தொடர்ந்து குறித்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அரபு மொழி தெரிந்த பொலிசார் நடத்திய விசாரணையில் அவர் பயன்படுத்திய அரபு மொழியில், ‘உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்’ என்பதற்கும் ’அவர்களை தாக்கு’ என்பதற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் என்று தெரிந்தது.

இதனையடுத்து குறித்த இளைஞரை பொலிசார் விடுதலை செய்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers