கெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி மகளை பலாத்காரம் செய்த தந்தை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
468Shares
468Shares
ibctamil.com

ஸ்பெயின் நாட்டில் கெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி தனது 15 வயது மகள் மற்றும் அவரது 2 தோழிகளை பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

45 வயதுடைய ஜேவியர் என்பவர், தனது வீட்டில் வைத்து தனது 15 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். கெட்ட ஆவிகளை விரட்டுவதாக பொய்கூறி இவ்வாறு செய்துள்ளார். மகள் மட்டுமல்லாது, அவரது வீட்டிற்கு வந்த மகளின் இரண்டு தோழிகளையும் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் தாய் புகார் அளித்ததையடுத்து, ஜேவியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், ஜேவியருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.

இருப்பினும், ஜேவியருக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டில் , பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்