தலையை பதம் பார்த்த வாள்: தானாகவே சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட நபர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரேசிலில் நபர் ஒருவர் தலையை பதம் பார்த்த வாளுடன் நடந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள Recife பகுதியில் கொள்ளையிடுவதை தொழிலாக கொண்ட நபர் Pedro Ferreira.

கடந்த 2004 முதல் சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர் சிறையில் நடந்த கலவரத்தில் சக கைதியால் வாள்வெட்டுக்கு இரையாகியுள்ளார்.

பெட்ரோவின் தலையை பதம் பார்த்த அந்த வாளை உருவாமல் அப்படியே நடந்து சென்று சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவிக்கு கோரியுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து அந்த நபரை நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.

அங்கே 5 மணி நேரம் நீண்டு நின்ற அறுவை சிகிச்சையின் முடிவில் அந்த வாள் அவரது தலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் சிறை அதிகாரிகளையும் மருத்துவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...