திருமணத்திற்கு பிறகு மலர்ந்த காதல்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சினிமாவை மிஞ்சிய உண்மை கதை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கொலம்பியாவை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது சிறுவயது நண்பன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் கர்ப்பிணி என நாடகமாடிய கதை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்டோனேலா சான்டியாகோ - விக்டர் ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஒரு கட்டத்தில் இருவரும் வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அன்டோனேலாவுக்கு 14 வயது மகளும் 13 வயது மகனும் இருக்கிறார்கள். விக்டருக்கு திருமணமாகி குழந்தை இல்லை.

கடந்த ஆண்டு அன்டோனேலாவின் தம்பி இறந்தது குறித்து விக்டருக்குத் தெரியவந்தது. துக்கம் விசாரிப்பதற்காகத் தொடர்புகொண்டார்.

மீண்டும் இருவரிடமும் நட்பு துளிர்த்தது. அடிக்கடி நேரில் சந்தித்துக்கொண்டனர். இருவருக்கும் காதல் உருவானது.

விக்டரிடம் உனது மனைவியை விவாகரத்து செய்துவிடு, நாம் சேர்ந்து வாழ்வோம் என பலமுறை அன்டோனேலா கூறியுள்ளார்.

அதனால் நாங்கள் இருவரும் ஒன்று சேர முடியாதோ என்று அச்சம் ஏற்பட்டது. பல முறை அவரது மனைவியை விவாகரத்துச் செய்யும்படிச் சொன்னேன்.

ஆனால் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இவரைப் போன்ற ஒரு மனிதருடன் வாழ்ந்த பிறகு என்னாலும் அவரை விட்டுவிட முடியவில்லை.

அதனால் நான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொன்னேன். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த விக்டருக்கு, நான் எதிர்பார்த்ததுபோலவே இது அதிகமான மகிழ்ச்சியைத் தந்தது.

நான் கர்ப்பமாக இருந்ததால் விக்டர் என்னுடனே இருந்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட் அவர் கேட்டபோது, ஆன்லைன் மூலம் ஒரு ரிப்போர்ட்டைத் தயார் செய்து கொடுத்துவிட்டேன். திடீரென்று ஒருநாள் வயிறு பெரிதாகவில்லை என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகே குஷனைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்

பிரசவத்துக்கான நாள் வந்தபோது, குழந்தை ஏன் இன்னும் பிறக்கவில்லை என்று கேட்க ஆரம்பித்தார். உடனே என் தங்கையின் வீட்டுக்குப் பிரசவத்துக்குச் செல்வதாகக் கூறி, சென்றுவிட்டேன்.

குழந்தை பிறந்தவுடன் யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால், குழந்தை பிறப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு வந்த விக்டருக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்துவிட்டது.

தான் நடத்திய நாடகம் அம்பலமான காரணத்தால் தற்போது மனம் உடைந்துள்ள அன்டோனேலா , மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.

விக்டர் கூறியதாவது, நான் அவளை நேசிக்கிறேன், கர்ப்பமாக நாடகம் ஆடியது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் சிறிது இடைவெளி விட்டு அவளுடன் மீண்டும் இணைவேன் என கூறியுள்ளார் விக்டர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்