இந்தோனேசியாவில் சுனாமி என்னை நோக்கி வந்தது: பாஸ்போர்ட்டை எடுக்க செய்த செயல்.. வெளிநாட்டவரின் பகீர் நிமிடங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியா சுனாமியில் சிக்கிகொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சிங்கப்பூரை சேர்ந்த நபர் தனது பகீர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 1200 பலியாகியுள்ளார்.

பலர் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலை உள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த கொக் சூங் என்பவர் பாராசூட்டில் பறக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியாவுக்கு வந்த நிலையில் அங்கு சுனாமி ஏற்பட்டது.

இது குறித்து சூங் கூறுகையில், நான் மெர்குரி ஹொட்டலில் தங்கியிருந்தபோது திடீரென பூமி குலுங்கியது.

இதையடுத்து ஹொட்டல் வேகமாக இடிய தொடங்கியது, இதையடுத்து நானும் என் நண்பர் பிரான்கோசும் உடனடியாக ஹொட்டலில் இருந்து வெளியேறினோம்.

இதன்பின்னர் ஹொட்டல் இடிந்தது. அப்போது ஹொட்டல் அருகில் உள்ள கடல் சீற்றம் அடைந்து சுனாமியாக மாறுவதை பார்த்தேன்.

உடனடியாக அதிலிருந்து தப்பிக்க அருகில் இருந்த உயர்ந்த கட்டிடத்துக்கு சென்றோம்.

அப்போது ஹொட்டல் கீழ்தளத்தில் சிறுமியும் அவர் தாயும் சிக்கி கொண்டனர். சிறுமியை காப்பாற்றிய என்னால் தாயை மீட்க முடியவில்லை.

பின்னர் சுனாமி ஓய்ந்த பிறகு காயமடைந்த தாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். என்னுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட உடமைகள் ஹொட்டலிலேயே இருந்தது.

இதையடுத்து அந்த இடிபாடுகளுக்கு நடுவிலும், ஏணி மூலம் ஹொட்டல் அறைக்கு சென்று அதை எடுத்து வந்தேன்.

பின்னர் சிறிய ரக மிலிட்டரி விமானம் மூலம் மகாசார் நகருக்கு வந்து அங்கிருந்து ஜகர்தர் நகருக்கு வந்தேன்.

அங்கிருந்து சிங்கபூருக்கு கிளம்பி ஞாயிறு அன்று பத்திரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். என் மனைவியை வீட்டுக்கு சென்று பார்த்த பின்னர் தான் நிம்மதியாக இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்