ராட்சத மலைப்பாம்பிடம் மரணப்பிடியில் சிக்கிய நாய்! மூன்று சிறுவர்களின் துணிச்சல் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மலைப்பாம்பிடம் சிக்கிய நாயை மூன்று சிறுவர்கள் காப்பாற்றியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீனாவில் உள்ளூர் ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பெரிய மலைப்பாம்பு ஒன்று, நாயை முழுங்குவதற்கு அதன் உடலை அப்படியே இறுக்கமாக பிடித்துள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்த மூன்று சிறுவர்கள் மலைப்பாம்பிடமிருந்து நாயை காப்பாற்றுவதற்கு போராடியுள்ளனர்.

அதில் ஒருவர் பாம்பின் வாலையும், மற்றொருவர் பாம்பின் முகத்தை வெளியில் இழுத்தும் பிடிக்கிறார். அதன் பின் இறுதியாக பாம்பிடமிருந்து நாய் காப்பாற்றப்படுகிறது.

இந்த வீடியோ உள்ளூர் ஊடகங்களில் வைரலாகி வருவதுடன், சமூகவலைதளமான டிக் டாக்கிலும் இது டிரண்டாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers