இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்: மனதை நொறுக்கும் சாட்டிலைட் வீடியோ வெளியீடு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஒரு நகரமே உருக்குலைந்து போகும் சாட்டிலைட் வீடியோவானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சிலாவேசி தீவில் கடந்த 29-ம் தேதியன்று 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட சுனாமி அப்பகுதியில் அமைந்திருந்த கடற்கரை நகரமான பலுவை சிதைத்து சுக்குநூறாக்கியது. இதில் அங்கிருந்த வணிகவளாகங்கள், கட்டிடங்கள் தரைமட்டமாக்க நொறுங்கின.

இந்த கோரசம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். தோண்ட தோண்ட கிடைக்கும் பிணங்களால் பொதுமக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விபத்தில் இதுவரை 1,649 பேர் இறந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நகரமே சிதைந்து அடித்து செல்லப்படும் சாட்டிலைட் வீடியோ காட்சியானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers