இந்தியாவிற்கு முழுவீச்சில் பதிலடி கொடுக்க தயார்: பாகிஸ்தான் ராணுவ தளபதி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா எதாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டால், முழுவீச்சில் பதிலடி கொடுக்க தயார் என பாகிஸ்தான் ராணுவ தளபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் பலியானதற்கு பாகிஸ்தான் காரணம் இந்திய பிரதமர் துவங்கி அரசியல் தலைவர்கள் பலரும் தொடர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த காரணத்தால் தற்போது வரை இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையில் பேசிய இந்திய ராணுவ தளபதி, இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சம்மந்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் காபூர், எங்கள் நாட்டுக்கென்று 72 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. 1947-ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதை இந்தியாவினால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புல்வாமா தாக்குதல் குறித்து எந்த ஒரு துல்லியமான விசாரணையும் இல்லமால் இந்தியா, பாகிஸ்தானை குற்றம் சுமத்துகிறது எனகூறினார்.

மேலும், நாங்கள் யுத்தம் செய்வதற்கு தயாராக இல்லை, நீங்கள் (இந்தியா) தொடர்ந்து அச்சுறுத்தல்களை வெளியிட்டு வருகிறீர்கள். அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. யுத்தத்தை ஆரம்பிக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், இந்தியா ஏதாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டால், அதற்கு முழுவீச்சில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்