உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும்! ஐநா சபை தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

மக்கள் தொகை எண்ணிக்கையில் இன்னும் 8 ஆண்டுகளில், சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை-2019 என்ற அறிக்கையை ஐ.நா.சபை வெளியிட்டுள்ளது. உலக மக்கள்தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. இந்த மக்கள்தொகை 2050ஆம் ஆண்டில் 970 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில், 2019 மற்றும் 2050ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவின் மக்கள்தொகை 3 கோடி அளவில் குறையும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் மக்கள் தொகையின் உயர்வு வழக்கம்போலவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

மேலும் ஆப்பிரிக்காவில் தற்போதுள்ள மக்கள், 2050ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 8 ஆண்டுகளில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...