விமானத்தில் கவர்ச்சி உடையில் வந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் பயணிகள் விமானத்தில் காதலனுடன் கவர்ச்சி உடையில் வந்த பெண், விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து அவருடைய தங்கை டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சம்பவ தினத்தன்று வியூசிலிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விலை குறைவான விமானத்தில் ஸ்பேயினைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலனுடன் பால்மா பகுதியில் இருந்து புறப்பட தயாராகியுள்ளார்.

அதன் படி அவர் விமானத்தின் டிக்கெட் போன்றவைகளை சரியாக எடுத்துச் சென்ற போதும், அவரை அங்கிருந்த விமானத்தின் பணிப்பெண் அனுமதிக்கவில்லை, ஏனெனில் அவர் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் low cut bodysuit உடை அணிந்துள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பிற்கும், விமானத்தில் என்று சில விதிமுறைகள் இருப்பதாகவும், வேறு எதுவும் தவறானது நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அவரை விமானத்தில் பறக்க அனுமதிக்கவில்லை, இதனால் இது குறித்து அவர் பணிப்பெண்ணிடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், விமானநிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் அங்கு வந்த பொலிசார் அவர்களை வெளியில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் சகோதரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது குறித்து விமான நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளது.

ஆனால் விமான நிறுவனமோ, விமானத்தில் பறப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை பயணிகளும் பின்பற்ற வேண்டும், அதுமட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers