போதையில்... விமானத்தில் பயணிகள் முன் மகனிடம் மோசமாக நடந்த தாய்: வெளியான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

கிரீஸ் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணித்த விமானத்தில் இரண்டு பெண் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகளிடையே மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Zakynthos இருந்து Liverpool-க்கு பயணித்த easyJet விமான நிறுவன விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் இரண்டு பெண்கள் ஐந்து குழந்தைகளுடன் ஏறியுள்ளனர்.

விமான பயணத்தின் போது இரண்டு பெண்களும் 1 லிட்டர் வோட்கா மது குடித்ததாக கூறப்படுகிறது. பயணம் முழுவதும் அவர்களின் மோசமான நடத்தை காரணமாக விமானி விமானத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என பயணிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஏறிய உடனே பெண்கள் பிரச்னையில் ஈடுபட தொடங்கினர். விமானம் புறப்பட்டவுடன். அப்பெண் தனது மகனை காலை உடைத்துவிடுவேன் என கூறி மிக மோசமான வார்த்தைகளால் வசை பாடினார்.

அமைதியாக இருக்கும் படி பயணிகளில் ஒருவர் கோரியுள்ளார், அதற்கு பதிலளித்த அப்பெண், யார் என்னை தடுக்கப் போகிறீர்கள்? யாராலும் என்னை தடுக்க முடியாது என கூறி மோசமாக பேசியுள்ளார்.

இதனையடுத்து, விமானம் Liverpool நிலையத்தில் தரையிறங்கிய உடன், விமானத்திற்குள் நுழைந்த பொலிசார், ரகளையில் ஈடுபட்ட இரண்டு பெண்ணையும் தரதர வென இழுத்துச்சென்றுள்ளனர். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் கைதட்டி கொண்டாடி உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்