படுக்கையறையில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த போது சிறுமிக்கு நடந்த சோகம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த போது அதன் பேட்டரி வெடித்து சிதறியதால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது.

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த Alua Asetkyzy Abzalbek என்கிற 14 வயது சிறுமி, கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் நள்ளிரவில் பாடல் கேட்டுக்கொண்டிருந்துள்ளார்.

அதிகாலை அவரை எழுப்புவதற்காக அறையின் உள்ளே நுழைந்த அவருடைய பெற்றோர் மகள் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

East2west news

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சோதனை மேற்கொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிட்ம் பேசிய பொலிஸார், இரவில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த சிறுமி செல்போனை சார்ஜ் போட்டபடியே உறங்கவிட்டார். இதனால் அதிக சூடேறிய பேட்டரி அதிகாலை வெடித்து சிதறியுள்ளது.

இதில் சிறுமியின் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து இறந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

East2west news
East2west news

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்