மர்ம நபர்களால் பயணிகள் விமானம் கடத்தப்பட்டதா? வெளியான பரபரப்பு வீடியோவின் உண்மை தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பதை வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது போன்றும், உள்ளே விமான ஊழியர்கள் இருப்பது போன்றும், முகமுடி மற்றும் துப்பாக்கி போன்று வைத்திருக்கும் அந்த நபர்கள் தொடர்ந்து கத்துவது போன்றும் இருந்தது.

(Image: TheNames_JH /Twitter)

இதனால் இணையவாசிகள் பலரும் உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன ஆனது? அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று குறித்த வீடியோவை பகிரப்பட்டதால், அந்த வீடியோ 34,000-க்கு மேல் ரீடுவிட் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி அதைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், குறித்த விமானம் கடத்தப்படவில்லை, அது பயிற்சிகாக மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

(Image: TheNames_JH /Twitter)

இது குறித்து இன்டர் ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உண்மையில் நடந்த சம்பவம் கிடையாது. கடந்த மாதம் 5-ஆம் திகதி Ciudad del Carmen-வில் இருக்கும் சர்வதேச விமானநிலையத்தில் விமானம் தீவிரவாதிகளால் மிரட்டப்பட்டு கடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நடத்தப்பட்ட பயிற்சி என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக இது வானில் நடத்தப்படவில்லை, விமானநிலையத்தில் வைத்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

(Image: TheNames_JH /Twitter)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்