கையில் பயங்கர ஆயுதம்... பழிக்கு பழி! முதல் முறையாக கமெராவில் சிக்கிய பெண் ஐ.எஸ். தீவிரவாதி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மாலியில் இராணுவ முகாம் மீது திவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், பெண் தீவிரவாதியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மேனகா பிராந்தியத்தின் இந்தெலிமானில் முகாமுக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேன்களில் வந்த தீவிரவாதிகள், கனரக ஆயுதங்களுடன் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று வெவ்வேறு புள்ளிகளிலிருந்து ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தினர்.

(Image: Global Risk International Ltd)

இதனால் 53 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்...

இந்நிலையில் மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் தீவிரவாதி ஒருவர் இருந்துள்ளார் என்றும் அவர் அந்த தாக்குதலுக்கு பின்னர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை ஏந்தி கொண்டாடியதாக வீடியோ வெளியாகியுள்ளது.

(Image: Global Risk International UK Ltd)

மேலும் இந்த தாக்குதல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாத் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

(Image: Global Risk International UK Ltd)

சிரியாவின் பரிஷா பகுதியில் பதுங்கியிருந்த பாக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது, தான் பிடிபடாமல் இருக்க, கடந்த மாதம் 26-ஆம் திகதி உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை பாக்தாதி வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்