இந்திய பெருங்கடலில் 1 மணி நேரம் தத்தளித்த நபர்: வியத்தகு முறையில் மீட்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்திய பெருங்கடலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தத்தளித்த நபரை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

MSC Orchestra என்கிற கப்பலானது 2007ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த கப்பல் 3,200 பயணிகளையும் கிட்டத்தட்ட 1,000 பணியாளர்களையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மேலும் ஸ்பா, நீச்சல் குளங்கள், ஜாகிங் டிராக், தியேட்டர் மற்றும் கேசினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த கப்பல் டிசம்பர் 28 அன்று தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து புறப்பட்டு, ஜனவரி 3 வரை மொரீஷியஸில் நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்பிறகு ரீயூனியன் தீவுக்கு செல்லவிருந்தது.

இந்த நிலையில் கப்பலில் பயணித்த அடையாளம் காணப்படாத ஒரு நபர், வேண்டுமென்றே இந்திய பெருங்கடலில் குதித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தேடல் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மடகாஸ்கர் கடற்கரையில் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த நபருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், பயணத்தை திட்டமிட்டபடி தொடர முடிந்துள்ளதாகவும், கப்பலின் நிர்வாக இயக்குனர் ரோஸ் வோல்க் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கப்பல் ஜனவரி 8 ஆம் திகதி டர்பனுக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய அந்த நபர் பயணத்தில் தொடர அனுமதிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்