நிர்வாண புகைப்படம்... பலருடன் தொடர்பு! மனைவியின் நடவடிக்கையால் கணவன் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கென்யாவில் மனைவி பலருடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்த கணவன் செய்த கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் தலைநகரான Kitui-வை சேர்ந்தவர் Dennis Mumo. இவரின் மனைவி பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பதை சமூக ஊடக செய்தியின் மூலம் அறிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் Dennis Mumo தொழில் விவகாரமாக கிழக்கு ஆப்பிரிக்காவின் Rwanda-வுக்கு புறப்படுவதற்கு முன், தன்னுடைய மனைவியின் பிறப்புறுப்பில் பசையை ஊற்றியுள்ளார்.

இந்த தகவல் எப்படியோ பொலிசாருக்கு தெரியவந்ததால், உடனடியாக பொலிசார் Dennis Mumo-வை கைது செய்துள்ளனர்.

அப்போது அவர் பொலிசாரிடம் நான் என்னுடைய மனைவியை பாதுகாப்பதற்காக இப்படி செய்தேன், தன்னுடைய மனைவி குறைந்த பட்சம் நான்கு பேருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்ற ஆதாரத்தை என்னால் காட்ட முடியும், அதற்கான குறுந்தகவல்கள் என்னிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அடுத்த வாரம் பட்டாசு இருக்கிறது என்று குறிப்பிட்டு, மனிதன் ஒருவனுக்கு மனைவியின் நிர்வாண புகைப்படம் அனுப்பப்பட்டிருந்ததை பார்த்ததாக கூறியுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட Dennis Mumo வரும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இது தொடர்பான விசாரணையில், அவருக்கு துஷ்பிரயோகம் செய்தற்கான பெரிய தண்டனை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அவரது மனைவியும் விபச்சார குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெறும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்