ஒற்றுமை முக்கியம்! இல்லையென்றால் கொரோனாவிடம் தோற்றுவிடுவோம்... ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா தொடர்பில் போர்க்கால திட்டமிடல் அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே கொரோனா வைரஸ் பேராபத்தில் தள்ளிவிட்டுள்ள நிலையில் உடனடியாக ஜி-20அமைப்பை கூட்டி இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சீனா, பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தின. இதைத்தொடர்ந்து ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவரான சவுதி அரேபிய அரசர் சல்மான் தலைமையில் ஜி-20அமைப்பின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மாநாடு நேற்று நடந்தது

ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் வீடியோ மாநாட்டுக்கு சவுதி அரேபிய அரசர் சல்மான் தலைமை வகித்தார்.

மாநாட்டில் ஜி-20 அமைப்பின் உறுப்பினர்களான அர்ஜென்டைனா, அவுஸ்திரேலியா, பிரேசில் ,கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தெற்கு ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

சிறப்பு அழைப்பாளர்களாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற வகையில் ஸ்பெயின், சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய சவுதிஅரேபியா அரசர் சல்மான், உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரபாயத்துக்கு எதிராக கூட்டணி அமைத்து ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை இந்த மாநாட்டின் மூலம் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசுகையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் இருக்கிறோம், இன்னும் நாம் வெற்றி பெறவில்லை.

இந்த போரில் சரியான திட்டமிடலுடன் களத்தில் இறங்க வேண்டும்.

ஜி20 நாடுகள் மாநாட்டில் ஒற்றுமை தான் மிக முக்கியம். இல்லையென்றால் கொரோனாவிடம் தோற்றுவிடுவோம், நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் இருந்தாலும் அதை இந்த நேரத்தில் களைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் குறித்த முறையான பரிசோதனை, கண்டுபிடிப்பு, தனிமைப்படுத்துதல், சிகிச்சை முறை, கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் இல்லாத சூழலி்ல இந்த நடவடிக்கைகள் அவசியம்.

பெரிய நாடுகள் பல்வேறு நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடைகள் இந்த நேரத்தில் நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...