பெய்ரூட் வெடி விபத்தால் தேவாலயத்தில் நடந்த பயங்கரம்! நிலநடுக்கத்தை உணர வைத்த திகில் காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

லெபான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பயங்கர வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த சம்பவத்தின் போது தேவலாயம் ஒன்று பாதிப்புக்குள்ளாகி, பாதிரியார் ஒருவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்து ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 4500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படிருப்பதாகவும் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது.

இந்த வெடிவிபத்திற்கு முக்கிய காரணமாக, அங்கிருந்த சுமார் 2,750 டன் வெடிக்கக்கூடிய ரசாயனம் தான் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுவரை இதற்கு என்ன காரணம் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த பயங்கர வெடி விபத்தின் போது, தேவாலம் ஒன்றும் சிக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதில், பாதிரியா ஆராதித்து கொண்டிருக்கும் போது, திடீரென்று ஒரு பயங்கர நிலநடுக்கம் போன்று ஒரு சத்தம் கேட்கிறது. அதன் பின் தேவாலயத்தில் இருந்த விளக்குகள் அனைகிறது. அதைத் தொடர்ந்து அங்கு கட்டிடங்கள் இடிந்து விழுக, உடனே பாதிரியார் ஓடுகிறார்.

பாதிரியாரின் நிலை என்ன? அங்கிருந்தவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து அந்த ஒரு தகவலும் இல்லை.

ஆனால், சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, 3.5 ரிக்டர் அளவிலான பூகம்பத்திற்கு சமமான சக்தியுடன் தாக்கப்பட்ட தருணத்தை பதிவு செய்துள்ளதாக ஜெர்மனியின் புவி அறிவியல் மையம் GFZ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்