இந்த நாட்டிலிருந்து அல்லது அவ்வழியாக வரும் பயணிகள் கூட நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்! இத்தாலி திட்டவட்டம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
268Shares

கொலம்பியாவிலிருந்து அல்லது அதன் வழியாக வரும் பயணிகள் கூட இத்தாலிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதிய உத்தரவு ஒன்றில் தான் கையெழுத்திட்டதாக இத்தாலி சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்,

புதிய உத்தரவின் படி, குரோஷியா, கிரீஸ், மால்டா மற்றும் ஸ்பெயின் ஆகிய நான்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தாலியர்களுக்கான பிரபலமான விடுமுறை இடங்களாக இருக்கும் நான்கு நாடுகளில் புதிய நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மாதங்களில் நாம் அனைவரும் செய்த தியாகத்திற்கு கிடைத்த பலன்களை பாதுகாக்க ஒரு விவேகமான அணுகுமுறையை நாங்கள் தொடர வேண்டும் என்று ஸ்பெரான்சா கூறினார்.

இத்தாலியில் புதன்கிழமை சுமார் 481 புதிய கொரோனா வழக்குகள் பதிவானது, மேலும் 10 பேர் உயிரிழந்ததாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்