சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே மோதல்கள் வெடித்துள்ளன.
1991-ல் பிரிவதற்கு முன்னர் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் சோவியத் ஒன்றியனாக இருந்தன.
ஆனால், இரு நாடுகளுக்கும் நடுவில் உள்ள Nagorno-Karabakh யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை 40 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
Nagorno-Karabakh அஜர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜூலை மாதம் நடந்த இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை மோதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, Nagorno-Karabakh பகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் பல ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு மிகப்பெரிய அளவிலான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று Nagorno-Karabak பிராந்தியத்தில் அஜர்பைஜான் விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது.
ஆர்மீனய இராணுவம் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர்களில் பயணித்தவர்கள் உயிருடன் இருப்பதாக அஜர்பைஜான் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் இராணுவம் தற்போது இப்பகுதியில் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது.
According to local population testimony , as a result of #Azerbaijani Armed Forces counter-offensive attack, many military facilities on unrecognized Nagorno-Karabakh Republic territory were destroyed and damaged.#Azerbaijan #Armenia pic.twitter.com/Ov6yQIS0zU
— Anon Candanga EN🌍🌎🌏 (@anon_candanga) September 27, 2020
இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகாரித்துள்ளதால் Nagorno-Karabakh பிராந்தியத்தில் வாசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனிய-அஜர்டைஜான் இரு நாடுகளை தாக்குதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.