பிரித்தானியாவை விஞ்சி உலகிலேயே மிக வேகமாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திவரும் நாடு!

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
678Shares

இஸ்ரேல் தனது தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்த 9 நாட்களில், பிரித்தானியாவை விட கிட்டத்தட்ட 5 மடங்கு கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ளது.

புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் பிரித்தானியா, தற்போது அதன் மக்கள் தொகையில் 1.2 மக்களுக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளது.

ஆனால், இஸ்ரேல் அதன் மக்கள்தொகையில் இதுவரை 5.7 சதவிகிதம் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ளது.

இஸ்ரேல் இந்த திட்டத்தை டிசம்பர் 20, அதாவது பிரித்தானியா அதன் தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய 12 நாட்களுக்குப் பிறகே தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல், தடுப்பூசி போடத் தொடங்கிய 9 நாட்களில் அரை மில்லியன் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது, இது தற்போது உலகின் மிக வேகமான தடுப்பூசி திட்ட செயல்பாடாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை 412,398 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் 2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதைப் பார்க்க விரும்புவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற ஆபத்தான தொழிலாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்