சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்! பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுத்தி குழு அறிவித்துள்ளது.

அபா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த 4 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக ஹவுத்தி இராணுவ செய்தித்தொடர்பாளர் Yahya Sarea கூறினார்.

சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில் பல தாக்குதல்களை முறியடித்ததாக சவுதி தெரிவித்துள்ளது. எனினும் சிலவற்றை ஏமன் எல்லையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபா விமான நிலையத்தை தாக்கியுள்ளது.

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்தும் வான்வெளி மற்றும் மற்ற நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாகYahya Sarea கூறினார்.

அபா விமான நிலையம் மீது ஹவுத்தி நடத்திய டிரோன் தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்றில் தீப்பிடித்ததாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை தகவல் தெரிவித்துள்ளது.

எனினும் தீ உடனே கட்டுக்குள் கொண்டுவரப்படதாகவும், அபா விமான நிலையத்தை குறிவைப்பது போர் குற்றம் மற்றும் இது பொதுமக்கள் பயணிகள் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்