15 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை படைக்குமா இந்தியா?

Report Print Amirah in ஏனைய விளையாட்டுக்கள்

ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் இன்று மோதுகின்றன.

பரபரப்பான இப்போட்டி மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் கடந்த 8ஆம் திகதி தொடங்கிய இந்த தொடரில், 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி உள்பட மொத்தம் 16 அணிகள் களமிறங்கின.

இந்திய அணி 2001ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், 1997ல் பைனல் வரை முன்னேறி 2வது இடத்தை பிடித்தது.

கடந்த 15 ஆண்டுகளாக ஜூனியர் உலக கிண்ணத்தை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் இந்த தொடர் தொடர்ந்து 2வது முறையாக நடப்பது குறிப்பிடத்தக்கது. 2013ல் இப்போட்டி டெல்லியில் நடத்தப்பட்டது. டி பிரிவில் இடம் பெற்ற இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் (9 புள்ளி) முதலிடம் பிடித்து கம்பீரமாக கால் இறுதிக்கு முன்னேறியது.

லீக் ஆட்டங்களின் கனடா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்திய இந்தியா, கால் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில்

ஸ்பெயினை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அடுத்து பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை அரை இறுதியில் எதிர்கொண்டது.

இதில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments