டோனியின் அடுத்த திட்டம் இது தான்..! பிரிந்து செல்கிறது இந்திய அணி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக் கோப்பை தொடருக்காக கடந்த மே 20ம் தேதி முதல் ஒன்றாக பயணித்த இந்திய அணி வீரர்கள், தற்போது, வெவ்வேறு நாடுகளுக்கு பிரிந்து செல்ல உள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததின் மூலம், இந்தியாவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி தொடங்கவுள்ளது.

மே 20ம் தேதி முதல் உலகக் கோப்பை தொடருக்காக ஒன்றாக பயணித்த இந்திய அணிக்கு, தற்போது, இரண்டு வாரம் இடைவெளி கிடைத்துள்ளது. இந்நிலையில்,இங்கிலாந்தில் இருந்து டிக்கெட்டுகள் கிடைப்பதன் அடிப்படையில் வீரர்கள் குழுக்களாக தங்கள் விருப்பமான இடத்திற்கு செல்லத் தொடங்குவார்கள் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது.

சில வீரர்கள் நாடு திரும்ப உள்ளதாகவும், சிலர் இங்கிலாந்திலேயே இருப்பார்கள் அல்லது வெவ்வேறு இடங்களுக்கு செல்வார்கள் என தெரிவித்துள்ளனர். டோனியின் ஓய்வு குறித்து பல வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் சில தினங்களுக்கு பிறகு தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers