போட்டியின்போது தாக்கிய மின்னல்.. சுருண்டு விழுந்த வீரர்கள்! அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஜமைக்காவில் கால்பந்தாட்ட போட்டியின்போது மின்னல் தாக்கியதில், இரண்டு வீரர்கள் சுருண்டு விழுந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் கால்பந்தாட்டப் போட்டி ஒன்று நடந்தது. ஜமைக்கா கல்லூரி அணிக்கும், வோல்மெர்ஸ் பாய்ஸ் அணிக்கும் இடையே இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் திடீரென மின்னல் வெட்டியது. அதன் தாக்கத்தில் மைதானத்தில் இருந்த இரண்டு வீரர்கள், தலையைப் பிடித்துக் கொண்டு ஒரே நேரத்தில் மைதானத்தில் மண்டியிட்டு வீழ்ந்தனர்.

இதனைக் கண்ட நடுவர் உடனடியாக விசில் ஊதி போட்டியை நிறுத்தினர். பின்னர் இரண்டு வீரர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவருக்கு இடது பக்க உடல் பாகம் செயலிழந்தது. மேலும் அவர் பேச்சு வராமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு வீரரும், மின்னல் தாக்கியபோது நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட வீரரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

ஏற்கனவே, கடந்த 1998ஆம் ஆண்டு அக்டோபரில் காங்கோவில் நடந்த கால்பந்தாட்ட மைதானத்தில், மின்னல் தாக்கியதில் வீரர்கள் பார்வையாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்ததோடு, 30 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்