இந்திய கிரிக்கெட் அணியின் தினசரி சலுகை தொகை இரட்டிப்பு.. ஒரு நாளைக்கே இவ்ளோவா!

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தினசரி சலுகை தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி தலைமயிலான இந்திய அணி உள்நாட்டில் அசத்தியது போலவே வெளிநாட்டு தொடர்களிலும் அசத்தி வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்களின் அன்றாட சலுகை தொகையை இரட்டிப்பாக்கி அவர்களுக்கு வெகுமதி அளிக்க நிர்வாகிகள் குழு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையின்படி, இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு முந்தைய தொகையான 125 டொலர் (ரூ 8,899.65) உடன் ஒப்பிடும்போது இப்போது 250 டொலர் (ரூ .17,799.30) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டில் விளையாடும் போது அளிக்கப்படும் சலுகை தொகையில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் குழுவின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது விமானத்தில் வணிக வர்க்க பிவிரில் பயணம், தங்குமிடம் மற்றும் சலவை என வீரர்கள் மற்றும் ஊழியர்களின் செலவினங்களுக்கு பிசிசிஐ தனியாக பணம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான சலுகை தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இந்திய அணி பெரும்பாலும் உள்நாட்டில் விளையாடுவார்கள் என்றாலும், அவர்கள் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்து செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers