எனக்கும் கோபம் வரும்: முதன்முறையாக மனம் திறந்த டோனி!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி கோபத்தை கட்டுப்படுத்துவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்காக வாங்கி பெருமைப்படுத்தியவர்.

மைதானத்தில் பரபரப்பான நேரத்திலும் கூட பொறுமையாக நிதானமான முடிவை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்.

இவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு பின்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், போட்டிகள், நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்ளாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோனி, “களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும்.

நான் சமமான அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன். சில நேரங்களில் கோபமாக உணர்வேன், சில நேரங்களில் ஏமாற்றமடைவேன். ஆனால் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானது இல்லை. இந்த உணர்ச்சிகளை விட அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டியது என்பது முக்கியமானது. எனது உணர்ச்சிகளை மற்ற சில நபர்களை விட சற்று சிறப்பாக கட்டுப்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன்“ என பேசியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்