உலகமே ஸ்தம்பித்துவிட்டது!... காரணம் சீனாவே- கடுமையாக விமர்சித்துள்ள ஷோயிப் அக்தர்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது, ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவின் ஹூபே மாநிலம், வூஹான் நகரிலிருந்துதான் பரவியது.

இந்நிலையில் சீனாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர்.

அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நீங்கள் ஏன் வவ்வாலை சாப்பிடுகிறீர்கள்.

வவ்வால்கள் மூலமே கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது, சீன மக்களின் உணவு முறை தான் இன்று உலகையை பெரும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது.

நாய், பூனை, வவ்வால்களை எல்லாம் எப்படித்தான் சாப்பிடுகிறீர்கள் என எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சீன மக்களுக்கு எதிராகவும், விலங்குகளுக்கான சட்டத்துக்கு எதிராகவும் நான் பேசவில்லை.

ஆனால் சில சட்டங்கள், கட்டுப்பாடுகள் உள்ளன, எதை வேண்டுமானாலும் எப்படி சாப்பிட முடியும்.

கொரோனா வைரசால் உலகமே சிக்கலில் இருக்கிறது, சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது, கிரிக்கெட் போட்டிகள் ரத்தாகின்றன, ஹொட்டல் துறை, போக்குவரத்து, ஒளிபரப்பு என அனைத்துமே இழப்பை சந்தித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்