தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்ட மக்கள்! ஆதரவளித்த குமார் சங்ககாரா... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தங்களை தாங்களே மக்கள் தனிமைப்படுத்தி கொண்டு மன அழுத்தத்தை குறைக்க பாடல்களை பாடிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்களும் அதை மறுபதிவு செய்து வைரலாக்கியுள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் சீனாவுக்கு அடுத்து அதிக பாதிப்பையும், உயிரிழப்பையும் இத்தாலி தான் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இத்தாலியின் Sicily பகுதியில் அருகருகே அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டனர்.

அதன்படி பால்கனியில் அவர்கள் நின்று கொண்டு தேசிய கீதம், கொரோனா வைரஸால் எங்களை தோற்கடிக்க முடியாது போன்ற பாடல்களை பாடிய வீடியோ டுவிட்டரில் வெளியிடப்பட்டது.

இந்த பதிவை இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் வெளியிட்டு, அருமை என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த வீடியோ பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணி ஜாம்பவான் குமார் சங்ககாரா மறுபதிவு செய்ய அது வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்