எனது மகளை மிகவும் மிஸ் செய்கிறேன்! மனைவியை பிரிந்து வாழும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் உருக்கம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபில் தொடரில் விளையாடுவதற்காக துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கிங்ஸ் லெவன் அணியின் வீரருமான முஹமது ஷமி தனது மகளை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19 திகதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து தீவிர பயிற்சி மேற்கொண்டு ஆயத்தமாகி வருகின்றனர்.

இது தொடர்பில் பேசிய கிங்ஸ் லெவன் அணியின் வீரர் முஹமது ஷமி, ஊரடங்கு காலத்திலும் நான் எனது பண்ணையில் வீட்டியிலேயே பயிற்சியை மேற்கொண்டு இருந்ததால் என் மகளை பார்க்க முடியவில்லை. அவளும் கிடுகிடுவென வளர்ந்து விட்டால் என் மகளை பார்க்காமல் நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன்.

கொரோனா தொற்றினால் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாமல் இருந்த நாங்கள் தற்போது ஐபிஎல் வாய்ப்பு மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜகான் ஏற்கனவே அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழுகின்றனர்.

மேலும் அவர்களது மகள் ஆயிரா தனது அம்மாவுடன் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்