புற்றுநோயை ஏற்படுத்தும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை கண்காணிக்க நவீன சாதனம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
68Shares
68Shares
lankasrimarket.com

சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது.

இக் கதிரின் செறிவு அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் புற்றுநோய் தாக்கம் அதிகமாக இருக்கும்.

எனவே இவ் வகை கதிர்களின் தாக்கம் தொடர்பில் கண்காணிப்பதற்கு உலகின் மிகச்சிறிய இலத்திரனியல் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இச் சாதனத்தினை தனிநபர்கள் பயன்படுத்த முடிவதுடன் இதன் உதவியுடன் தாக்கம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு முறைகளை கையாளவும் முடியும்.

மழைத் துளியின் அளவிற்கு இச் சாதனம் எடை குறைவாக இருப்பதுடன், சூரிய வெளிச்சத்திலேயே இயங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இதனை அமெரிக்காவில் உள்ள நோர்த் வெஸ்டேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியளர்கள் உருவாக்கியுள்ளனர்.

UV Sense எனும் இச் சாதனமானது அண்மையில் லாஸ் வெகாஸில் இடம்பெற்ற Consumer Electronics Show (CES) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்