கூகுள் மேப்பில் புதிய வசதி: அனைவரும் அறிந்திருப்பது அவசியம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இடங்கள் மற்றும் பயணிக்கும் பாதைகளை அறிந்துகொள்வதற்கு கூகுள் மேப் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இந்த மேப்பில் மற்றுமொரு புதிய வசதியினை உள்ளடக்க கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படும் பெருமளவான மாத்திரைகளை அழிப்பதற்கு அதற்கான சென்டர்கள் இருக்கும் இடத்தினை பயனர்களுக்கு காண்பிக்கக்கூடிய வசதியே அதுவாகும்.

கூகுள் மேப்பில் சென்று "drug drop-off near me" அல்லது "medication disposal near me" என டைப் செய்தால் மாத்திரைகளை அழிக்க உதவக்கூடிய சென்டர்களில் உங்களுக்கு அண்மையில் இருப்பவற்றினை காண்பிக்கும்.

தற்போது இச் சேவையில் 35,000 சென்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முதன் முறையாக Alabama, Arizona, Colorado, Iowa, Massachusetts, Michigan மற்றும் Pennsylvania ஆகிய 7 மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இச் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers