விளம்பர நோக்கத்தில் உங்கள் கைப்பேசி ட்ராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணையப்பாவனை அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஒவ்வொரு பயனர்களின் நடவடிக்கைகளையும் இலகுவாக தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்காணிக்கின்றன.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பயனர்களைக் கவரக்கூடிய வகையில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அதாவது பயனர் ஒருவர் இணையத்தளத்தில் எந்த விடயம் தொடர்பாக அதிகம் தேடுகின்றாரோ அது தொடர்பான விளம்பரங்களை அதிகம் காண்பித்து அவரை கவர முடியும்.

எனினும் இவ்வாறு கண்காணிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு ஐபோன்களில் வசதி தரப்பட்டுள்ளது.

இதன்படி Settings பகுதிக்கு சென்று அங்கு Privacy என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

அதில் Advertising என்பதன் கீழாக காணப்படும் Limit Ad Tracking என்பதை Enable செய்தால் போதும் இதன் பின்னர் பயனரின் ஆர்வத்தின் அடிப்படையில் விளம்பரங்கள் காண்பிக்கப்படுதல் மட்டுப்படுத்தப்படும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்