Windows 7 இயங்குதளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
201Shares

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் இயங்குதளமானது மிகவும் பிரபல்யமானதாகும்.

அதிலும் விண்டோஸ் 7 பதிப்பானது உலக அளவில் பலராலும் விரும்பப்பட்டு பயனர் இடைமுகைத்தினைக் கொண்டதாக இருக்கின்றது.

எனினும் அதன் பின்னர் விண்டோஸ் 8, விண்டோஸ் 10 ஆகியன அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் விண்டோஸ் 7 இயங்குதளத்தின் பயன்பாடு குறையத் தொடங்கியுள்ளது.

தவிர மைக்ரோசொப்ட் நிறுவனமும் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான பாதுகாப்பு மற்றும் அப்டேட் என்பவற்றினை நிறுத்தியுள்ளது.

அதாவது இம் மாதம் 14ம் திகதி இவ் இயங்குதளத்திற்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியாகின்றது.

அப்படியிருந்தும் தற்போது உலகெங்கிலும் சுமார் 1000 மில்லியன் சாதனங்களில் இவ் இயங்குதளப் பதிப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் டெக்ஸ்டாப் மற்றும் லப்டொப் ஆகியன அடங்கும்.

தவிர இந்த எண்ணிக்கையானது உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு விண்டோஸ் இயங்குதளத்தின் மொத்த பாவனையில் நான்கில் ஒரு பங்காக இருக்கின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்