வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம் இம்முறை ஏழாவது ஆண்டாக விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் சதுர்த்தி கலாரூப விநாயகர் நிமஜ்ஜன திருமஞ்சன தீர்த்த திருவிழா எதிர்வரும் 17ம் தகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
எமது வழிபாடு ஆத்மார்த்தம் அதாவது தனக்காக செய்வது, பரார்த்தம் மற்றவர்களின் பொருட்டு காம்யம் ஒரு காரணத்தை முன்னிட்டு செய்வது என மூன்று வகைப்படும்.
இதில் பல காரியங்கள் தனக்காகவும், பிறருக்காகவும் செய்வது இதனை இருவழி அருள் வழிபாடு செய்பவர்கள் என்ற பொருள்படும்படி உபயகாரர்கள் என கூறுவார்கள்.
கேதாரகௌரி விரத வழிபாடு ஆன்மார்த்த வழிபாடு அவ்வழிபாட்டில் சிவலிங்கம் புற்று மண்ணில் அல்லது சந்தனத்தில் செய்து வழிபாடு நிறைவடைந்ததும் நீர் நிலைகளில் விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு தேவையை நோக்கி செய்யும் மண்ணாலான உருவங்கள் கணிக லிங்கம் எனப்படும் அதாவது குறிக்கப்பட்ட கணம் வரைக்கும் வைத்து ஆராதிப்பது பின்புன் நீர்நிலையில் விடுவது புராணமரபு.
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யும் களிமண்ணாலான திருவுருவங்கள், நீர் நிலையில் விடுவதை நிமஜ்ஜனம் என்பார்கள்.
இது ஒரு பரார்த்த காம்ய வழிபாடு அதாவது எல்லோரும் சேர்ந்து மன மகிழ்வாக வாழ்வதற்கு விநாயகர் அவதரித்த நாளை அவரது அருள் வேண்டி கணி கலிங்கமாகிய விநாயகர் திருவுருவத்தை அழகுற செய்து அருள் வேண்டி பின்பு நீர் நிலையில் விடுவது.
ஏனெனில்.மண்ணுருவங்கள் உடையும் முன்பு நீரினில் கரைத்து விடவேண்டும். இதனுள் பஞ்ச பூத தத்துவமும் அடங்கி விடும். களிமண் மண்ணுடன் தொடர்பு நீர் அடுத்து. விளக்கு காட்டுதல் அக்னியுடன் தொடர்பு பஜனை பாடுதல் காற்றுடன் தொடர்பு.
அதனை கடலில் கரைக்கும் போது மேலே ஆகாய தொடர்பும் இணைகின்றது இதனை வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம் இம்முறை ஏழாவது ஆண்டாக செய்து வருகிறது.