துடிப்புடன் கூடிய இதய இழையத்தை செயற்கையாக உருவாக்கி சாதனை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

செயற்கையான முறையில் துடிப்புடன் கூடிய இதய இழையத்தை ஆய்வுகூடத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இயற்கையான இதய இழையங்களைப் போன்றே இச் செயற்கை இழையமும் உடலின் ஏனைய பாகங்களிற்கு இரத்தத்தை கொண்டு செல்லக்கூடியதாக இருக்கின்றது.

இதனை ஜேர்மனியில் உள்ள Medical Center Hamburg-Eppendorf பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே உருவாக்கியுள்ளனர்.

இவர்கள் குறித்த இழையத்தினை உருவாக்குவதற்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தினையும் பயன்படுத்தியுள்ளனர்.

மிக வேகமான துடிப்பினையும் தாங்கக்கூடிய வகையில் இவ் இழையம் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இப் புதிய கண்டுபிடிப்பின் ஊடாக எதிர்காலத்தில் இதயம் தொடர்பான நோய்களுக்கு வினைத்திறனான சிகிச்சையினை வழங்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers